Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் செய்திவாசிப்பாளர் பல் விழுந்தது

தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் செய்திவாசிப்பாளர் பல் விழுந்தது

By: Karunakaran Sat, 18 July 2020 1:15:43 PM

தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் செய்திவாசிப்பாளர் பல் விழுந்தது

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. டிவி நிருபர்கள் மற்றும் செய்தி அறிவிப்பாளர்கள், நேரடி ஒளிபரப்பின்போது வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொள்வது வழக்கம். ஆனால் நடக்கும் அனைத்தையும் அவர்கள் நிர்வகிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

இந்நிலையில், உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வரும் மரிச்சா படல்கோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவரது பல் உடைந்து விழுந்தது.

ukrain,reporter,tooth,television ,உக்ரைன், நிருபர், பல், தொலைக்காட்சி

பல் உடைந்து விழுந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் திகைப்படைந்திருப்பார்கள் அல்லது சிரிப்பார்கள். ஆனால் மரிச்சா படல்கோ சிறிதும் பதற்றமடையாமல், கிழே விழுந்த பல்லை புத்திசாலிதனமாக கைகளால் பிடித்து விட்டார்.

அதன்பின், தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை தொடர்ந்தார். அந்த நேரத்தில் எந்த நிகழ்வும் நடக்காதது போல் நடந்து கொண்டார். அவரது செயல் டுவிட்டர் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Tags :
|
|