Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்களவை தேர்தலை ஒன்றிணைந்து சந்தித்த இண்டியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு

மக்களவை தேர்தலை ஒன்றிணைந்து சந்தித்த இண்டியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு

By: Nagaraj Sat, 02 Sept 2023 3:40:50 PM

மக்களவை தேர்தலை ஒன்றிணைந்து சந்தித்த இண்டியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு

மும்பை: ஒன்றிணைந்து சந்திக்க முடிவு... மக்களவைத் தேர்தலை முடிந்தளவுக்கு ஒன்றிணைந்து சந்திப்பது என இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் 2 நாட்களாக நடைபெற்ற கூட்டத்தில், சோனியா, ராகுல் காந்தி, சரத்பவார், முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசித்த கட்சித் தலைவர்கள், வரும் நாட்களில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றினர்.

வெவ்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டை உடனடியாக மேற்கொள்ளவும், கட்சிகளிடையே விட்டுகொடுக்கும் மனப்பான்மையுடன் அவற்றை சுமூகமாக முடிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

coalition parties,elections,bjp rule,countdown to removal,rahul ,கூட்டணி கட்சிகள், தேர்தல், பாஜக ஆட்சி, அகற்ற கவுண்ட் டவுன், ராகுல்

மேலும், கூட்டணியை ஒருங்கிணைக்க சரத்பவார், கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு உள்ளிட்ட 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பின் கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழில் பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தனித்தனி கட்சிகளாக இருந்தாலும் நாட்டைக் காக்க ஒன்றிணைந்து உள்ளதாகவும், பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.

கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டால் பா.ஜ.க.வால் வெல்ல முடியாது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Tags :