துணைத்தேர்வெழுதிய 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
By: vaithegi Fri, 28 July 2023 10:29:34 AM
சென்னை: 11ம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு ... தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு வருகிற ஜூலை 28-ஆம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.
இதனை அடுத்து இதுதொடர்பான அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, 2023 ஜூன்/ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும்.
எனவே அதன்படி, துணைத்தேர்வெழுதிய 11-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல்/மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வருகிற ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.