Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

கேரளாவில் 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

By: Monisha Tue, 30 June 2020 6:30:55 PM

கேரளாவில் 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பெரும்பான்மையான மாநிலங்கள் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், கேரளாவில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இன்று 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு கேரளாவில் 4,22,450 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 98.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 41,906 மாணவர்கள் அதிகபட்ச கிரேடு மதிப்பெண்ணான A+ பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 4,500 மாணவர்கள் இம்முறை A+ கிரேடைப் பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,736 மாணவர்கள் A+ கிரேடைப் பெற்றுள்ளனர். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்று வந்த 10-ம் வகுப்புத் தேர்வுகள் கோவிட் பரவலால் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மே 26 முதல் 28-ம் தேதி வரை மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்பட்டன.

கேரளாவில் 9 புள்ளி கிரேடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்ச கிரேடு மதிப்பெண் 9, குறைந்தபட்சம் 1 ஆகும். அவை முறையே A+, A, B+, B, C+, C, D+, D, E என்பன ஆகும். இதில் D, E கிரேடு பெறுபவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டியது அவசியம். தேர்வு முடிவுகளை keralapareekshabhavan.in, sslcexam.kerala.gov.in, results.kite.kerala.gov.in, results.kerala.nic.in மற்றும் prd.kerala.gov.in ஆகிய இணைய தளங்களில் காணலாம்.

Tags :
|