Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 27-ந்தேதி வெளியீடு ..அரசு தேர்வுகள் இயக்ககம்

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 27-ந்தேதி வெளியீடு ..அரசு தேர்வுகள் இயக்ககம்

By: vaithegi Sat, 25 June 2022 10:24:42 AM

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும்  27-ந்தேதி வெளியீடு ..அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வை 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதினார்கள்.

இந்த பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) - 27-ந்தேதி வெளியிடப்பட இருப்பதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 27-ந்தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது.

government examinations directorate,exam results,chennai ,அரசு தேர்வுகள் இயக்ககம்,தேர்வு முடிவு,சென்னை

தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


Tags :