Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவும் ஆபத்து; தொற்று நோயியல் பிரிவு அதிகாரி எச்சரிக்கை

கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவும் ஆபத்து; தொற்று நோயியல் பிரிவு அதிகாரி எச்சரிக்கை

By: Nagaraj Mon, 13 July 2020 11:49:42 AM

கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவும் ஆபத்து; தொற்று நோயியல் பிரிவு அதிகாரி எச்சரிக்கை

கொரோனா குறித்து எச்சரிக்கை... கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் 500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

kandakkad,doctor,social spread,corona,warning ,கந்தக்காடு, மருத்துவர், சமூக பரவல், கொரோனா, எச்சரிக்கை

இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி வைத்தியர் சுடத் சமரவீர, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் உளநல ஆலோசனை உத்தியோகத்தர் பேருந்து மூலம் தனது வீட்டிக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் மருத்துவர் ஒருவரை சந்தித்துள்ளதுடன், பல வீடுகளுக்கு சென்றுள்ளார். இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் ஆபத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கந்தக்காடு நிலையத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் தொடர்புள்ளமை வெளிப்படையாக தெரியவந்துள்ளதால் இந்த வைரஸ் பரவுவது வெளிப்படையாக தெரிகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags :
|
|