Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை ரோவர் சிறப்பாக செய்கிறது

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை ரோவர் சிறப்பாக செய்கிறது

By: Nagaraj Sun, 27 Aug 2023 10:42:21 PM

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை ரோவர் சிறப்பாக செய்கிறது

திருவனந்தபுரம்: இஸ்ரோ தலைவர் தகவல்... விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தரபுரத்தில் பத்ரகாளி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திராயன் 3 திட்டத்தில் உள்ள 5 கருவிகளும் எதிர்பார்த்தது போன்று செயல்படுவதாக கூறினார்.

science,spirituality,life,isro chief,experiments,project ,அறிவியல், ஆன்மீகம், வாழ்க்கை, இஸ்ரோ தலைவர், பரிசோதனைகள், திட்டம்

அவை அனைத்தும் நிலவு தொடர்பான புகைப்படம் மற்றும் அறிவியல் தரவுகளை அனுப்பி வருவதாக சோம்நாத் குறிப்பிட்டார். திட்டமிட்டபடி செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு முன்பு அனைத்து பரிசோதனைகளும் நிறைவு பெறும் என்றார் அவர்.

தான் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர் என்று கூறிய சோம்நாத், ஆன்மீக ஆராய்ச்சிக்காகவே கோயில்களுக்கு சென்று வருவதாக குறிப்பிட்டார். அறிவியல் மற்றும் ஆன்மீகம் தமது வாழ்க்கையின் அங்கமே என்றும் அவர் கூறினார்.

Tags :
|