Advertisement

சோம்பேறிகளாக உள்ளனர் ஆட்சியாளர்கள்; கமல் விமர்சனம்

By: Nagaraj Wed, 16 Dec 2020 9:25:17 PM

சோம்பேறிகளாக உள்ளனர் ஆட்சியாளர்கள்; கமல் விமர்சனம்

வேலை செய்யாமல் ஊதியம் பெறுபவர்கள் சோம்பேறி என்றால் ஆட்சியில் இருப்பவர்களும் சோம்பேறிகளாக உள்ளனர்” என்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியிருக்கும் சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் மதுரை மற்றும் நெல்லையில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு எதிராகவும் அரசின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

kamal,lazy,those in power,critique ,கமல், சோம்பேறிகளாக, ஆட்சியில் இருப்பவர்கள், விமர்சனம்

இந்த நிலையில் நெல்லையில் பரப்புரையில் போது பேசிய கமல்ஹாசன், “எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான் தான். நிரந்தரம் என்பது எதிலும் கிடையாது. யாரும் கிடையாது. குற்ற உணர்வுடன் தற்போது தேர்தலுக்கு வந்துள்ளேன்.

முன்பே தவறை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். தண்ணீரை காசுக்கு விற்கும் அரசு நல்ல அரசே இல்லை” என்று விமர்சித்தார். “நடுநிலை என்பதை நான் காப்பி அடிக்கவில்லை. அது என் முப்பாட்டன் வள்ளுவன் வழி. அதுவே என் வழி. வேலை செய்யாமல் ஊதியம் பெறுபவர்கள் சோம்பேறி என்றால் ஆட்சியில் இருப்பவர்களும் சோம்பேறிகளாக உள்ளனர்” என்றும் கூறினார்.

Tags :
|
|