Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிங்கப்பூர் தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி மீண்டும் வெற்றி

சிங்கப்பூர் தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி மீண்டும் வெற்றி

By: Nagaraj Sat, 11 July 2020 3:37:18 PM

சிங்கப்பூர் தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி மீண்டும் வெற்றி

சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி (People’s Action Party) வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தலில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 880 இல் இருந்து 1100ஆக அதிகரிக்கப்பட்டது.

ஒரு வாக்குச் சாவடியில் 2400 முதல் 3000 பேர் வரை வாக்களித்தனர். காலை 8 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நடந்தது. இரண்டு மணிநேரம் வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை வேளையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வாக்குச் சாவடியில் முகக்கவசமும் கையுறையும் வழங்கப்பட்டன. மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக வாக்களித்தனர்.

singapore,elections,10 seats,people axion party,re-rule ,சிங்கப்பூர், தேர்தல், 10 இடங்கள், பீப்பிள் ஆக்சன் கட்சி, மீண்டும் ஆட்சி

இதனை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 1965ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் உள்ள ஆளும் பீப்பள் ஆக்ஷன் கட்சி, மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இக்கட்சி, 61.24 சதவீத வாக்கு வீதம் பெற்றது. இது கடந்த 2015ஆம் ஆண்டில் பெற்ற வாக்குச் வீதத்தை (69.9சதவீதம்) விட குறைவு.

எதிர்கட்சியான ‘வொர்க்கர்ஸ் கட்சி’, 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பிரித்தம் சிங், எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

Tags :