Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது; விமானப்படை தளபதி உறுதி

இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது; விமானப்படை தளபதி உறுதி

By: Nagaraj Sat, 20 June 2020 6:03:19 PM

இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது; விமானப்படை தளபதி உறுதி

உயிர்த் தியாகம் வீண் போகாது... எந்த விலை கொடுத்தும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம் என்பதையே, கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களின் வீரம்செறிந்த நடவடிக்கை காட்டுவதாக, விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா கூறியுள்ளார்.

இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் வீண்போக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள, இந்திய விமானப் படை அகாடமியில் பயிற்சி முடித்து, பணியில் சேரும் 123 விமானப்படை அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா முன்னிலையில், இந்த கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய விமானப் படை தளபதி, கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்த்தியாகம் செய்த கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் அவரது தலைமையில் சென்ற வீரர்களுக்கு புகழாரம் சூட்டினார்.

martyrs,vain,borderless,military officers ,உயிர்த்தியாகம், வீண் போகாது, எல்லைக்கோட்டு, ராணுவ அதிகாரிகள்

மிகவும் சவாலான சூழ்நிலையில், இந்திய ராணுவத்தினரின் வீரம்செறிந்த நடவடிக்கை, எத்தகைய விலை கொடுத்தும் இந்திய இறையாண்மையை காக்கத் தயங்க மாட்டோம் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

படைகளின் வீரர்கள் எப்போதும் தயார்நிலையில், விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், லடாக்கில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் நடைபெற்ற சம்பவம், வீரர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையை கையாள தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் என்று கூறினார்.

உரிய தயாரிப்புகளோடு ஆயத்த நிலையிலும், எத்தகைய அவசர, நெருக்கடி சூழ்நிலையை கையாளும் வகையிலும் விமானப் படை உள்ளது என்று தெரிவித்த பதாரியா, கால்வன் பள்ளத்தாக்கில் வீரர்களின் உயிர்த் தியாகம் ஒருபோதும் வீண்போகாது என தேசத்திற்கு உறுதியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

martyrs,vain,borderless,military officers ,உயிர்த்தியாகம், வீண் போகாது, எல்லைக்கோட்டு, ராணுவ அதிகாரிகள்

கட்டுப்பாட்டு எல்லைக் கோடாக இருந்தாலும், அதைத் தாண்டியும் உள்ள படை நிலை குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், முழுமையாக ஆய்வு செய்து, எதிர்வரும் எத்தகைய நெருக்கடியையும் கையாளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விமானப் படை தளபதி கூறினார்.

ராணுவ அதிகாரிகள் நிலையில் நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு ஏற்பட்ட பிறகும், உயிரிழப்புகளுக்கு வித்திடும் வகையில் சீனா நடந்து கொண்ட முறை ஏற்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில் அமைதியான முறையில் தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்.கே.எஸ்.பதாரியா தெரிவித்தார்.

Tags :
|