Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன கப்பலில் மாலுமிக்கு உடல் நலபாதிப்பு... விரைந்து சென்று உதவிக்கரம் நீட்டிய இந்திய காவல் படை

சீன கப்பலில் மாலுமிக்கு உடல் நலபாதிப்பு... விரைந்து சென்று உதவிக்கரம் நீட்டிய இந்திய காவல் படை

By: Nagaraj Mon, 16 Oct 2023 11:40:32 AM

சீன கப்பலில் மாலுமிக்கு உடல் நலபாதிப்பு... விரைந்து சென்று உதவிக்கரம் நீட்டிய இந்திய காவல் படை

புதுடில்லி: சீனக் கப்பலில் இருந்த மாலுமிக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை அறித்து விரைந்த சென்று உதவிகள் செய்துள்ளது இந்தியக் கடலோரக் காவல் படை கப்பல் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீன சரக்குக் கப்பலில் இருந்த மாலுமி ஒருவருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவரை உடனடியாக இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

hospital,harbour,police,india,mediterranean,chinese sailor ,மருத்துவமனை, துறைமுகம், காவல் படையினர், இந்தியா, நடுக்கடல், சீன மாலுமி

மேற்கு கடலோரப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த MT Hua Wei என்ற சீன நாட்டுக் கப்பலில் இருந்து மருத்துவ அவசர நிலைக்கு உதவுமாறு இந்திய கடலோர காவல் படைக்கு கோரிக்கை வந்தது.

இதையடுத்து கப்பலில் நடுக்கடலுக்குள் சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அந்த கப்பலில் இருந்த 49 வயது நபரை துறைமுகத்துக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Tags :
|
|