Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 3 மாதங்களுக்கு பணி விசாவை இலவசமாக நீட்டிப்பு செய்தார் சவுதி மன்னர்

3 மாதங்களுக்கு பணி விசாவை இலவசமாக நீட்டிப்பு செய்தார் சவுதி மன்னர்

By: Nagaraj Tue, 07 July 2020 11:17:48 AM

3 மாதங்களுக்கு பணி விசாவை இலவசமாக நீட்டிப்பு செய்தார் சவுதி மன்னர்

3 மாதங்கள் நீட்டிப்பு... சவுதி அரேபியாவில் காலாவதியான பணி விசாவை 3 மாதங்களுக்கு இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக ஏற்கனவே சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சவுதியை விட்டு இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் யாரும் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் விசாக்கள் காலியான நிலையில் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் அங்கேயே உள்ளனர்.

extension,saudi,foreigners,work visa,free of charge ,கட்டணமின்றி, நீட்டிப்பு, சவுதி, வெளிநாட்டினர், பணி விசா

இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்களும் சிக்கி தவிக்கின்றனர். பயணத்தடையால் அங்கேயே தங்கியிருப்பவர்களை அழைத்து வர பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சவுதியில் வெளிநாட்டினரின் பணி விசா மற்றும் சுற்றுலா விசா ஆகியவை செல்லுபடியாகும் கால அளவை மேலும் 3 மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|