Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி திட்டம் மக்கள் மத்தில் வரவேற்பை பெற்றுள்ளது

அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி திட்டம் மக்கள் மத்தில் வரவேற்பை பெற்றுள்ளது

By: vaithegi Sun, 28 Aug 2022 5:51:05 PM

அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி திட்டம் மக்கள் மத்தில் வரவேற்பை பெற்றுள்ளது

சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாயை உயர்ந்தும் வகையில் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோர் உணவு பொருட்கள் மற்றும் அவர்கள் பகுதியில் செய்ய கூடிய அனைத்து பொருட்களையும் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி முதல் இந்த பார்சல் சேவையை அரசு துவங்கி உள்ளது.

எனவே இதனால் அரசுக்கு தொடக்கத்தில் தினமும் ரூ.10,000 வருவாய் கிடைத்த நிலையில் தற்போது ரூ.15,000 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து மீன், தின்பண்டங்கள் அதிகளவில் பார்சலாக வருகிறது. அதே போல சேலத்தில் இருந்து பன்னீர் ஆகிய பொருட்களும் அதிக அளவில் பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து தினமும் 30 பார்சல்கள் அரசு பஸ்களில் செல்கின்றன. மேலும் பொதுமக்கள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே அரசு போக்குவரத்து கழக செயலி மூலம் பார்சல் அனுப்ப முன்பதிவு செய்யலாம்.

government express bus,parcel ,அரசு விரைவு பேருந்து,பார்சல்

இதை அடுத்து பார்சலின் எடையை குறிப்பிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதற்கு யுபிஐ முறையில் கட்டணம் செலுத்தும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பேருந்துகளில் கூரியர் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இச்சேவையினை பயன்படுத்தி கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags :