Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை என்பது குறித்த அறிவிப்பினை பள்ளி கல்வித்துறை வெளியீடு

பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை என்பது குறித்த அறிவிப்பினை பள்ளி கல்வித்துறை வெளியீடு

By: vaithegi Mon, 28 Aug 2023 10:04:05 AM

பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை என்பது குறித்த அறிவிப்பினை  பள்ளி கல்வித்துறை வெளியீடு

சென்னை: காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு ..... தமிழகத்தில் கோடை வெயிலின் காரணமாக பள்ளிகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கிய நிலையில் தற்போது சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சூழலில் பள்ளிகளில் காலாண்டு பாடத்திட்டம் முடிவு பெற இருப்பதால் காலாண்டு தேர்வுகள் எப்போது என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இதையடுத்து பல தனியார் பள்ளிகளில் எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில், மற்ற வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதம் 2-ம் வாரத்தில் காலாண்டு தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

school education department,quarterly vacation,school , பள்ளி கல்வித்துறை , காலாண்டு விடுமுறை ,பள்ளி


இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 1-3ம் வகுப்புகளுக்கு செப்.23 - அக்.2 ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதேபோன்று 4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.28 - அக்.2 ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

Tags :