Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது .. பள்ளிக்கல்வித்துறை

இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது .. பள்ளிக்கல்வித்துறை

By: vaithegi Fri, 23 Dec 2022 6:31:07 PM

இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது  ..  பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 15ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியது. அரையாண்டு தேர்வு 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.அதன்படி 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7,9, 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

எனவே அதன்படி பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இச்சூழலில் அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அரையாண்டு தேர்வுகள் முடிந்த பின் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

department of school education,chennai,half year examination ,பள்ளிக்கல்வித்துறை ,சென்னை,அரையாண்டு தேர்வு

இதனை அடுத்து இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் மட்டும் தரலாம் என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும்.

Tags :