- வீடு›
- செய்திகள்›
- பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் .. பள்ளிக்கல்வித்துறை
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் .. பள்ளிக்கல்வித்துறை
By: vaithegi Sat, 18 Mar 2023 2:56:15 PM
சென்னை: தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 24, ஏப்ரல் 10 மற்றும் 24-ல் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதனை அடுத்து அந்த சுற்றறிக்கையில், 12-ம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ளதாக மாணவர்களின் விவரங்களை கண்டறிய வேண்டும். மாணவர்களின் விவரங்களை சேகரித்து உரிய ஆலோசனை வழங்கி துணை தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும்.
எனவே தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்களை சேகரித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உடனே தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொதுத்தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றுள்ளனர்.
மேலும் இதுபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் எழுவதை பள்ளி மேலாண்மை குழு உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை சிறப்பு பயிற்சி மையங்களுக்கு அழைத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையே, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் வரும் 19-ம் தேதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.