Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ்அப் நிறுவனம அறிமுகம் செய்துள்ள Screen Sharing அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது

வாட்ஸ்அப் நிறுவனம அறிமுகம் செய்துள்ள Screen Sharing அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது

By: vaithegi Wed, 09 Aug 2023 11:50:34 AM

வாட்ஸ்அப் நிறுவனம அறிமுகம் செய்துள்ள Screen Sharing அப்டேட்  பயன்பாட்டிற்கு வந்துள்ளது

இந்தியா: வாட்ஸ்அப் நிறுவனம் ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதாவது, இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை போல பயனர்களுக்கு கூடுதல் அனுபவத்தை தரும் வகையில் சேட் ஹிஸ்டரியை ஒரு மொபைலில் இருந்து மறு மொபைலுக்கு மாற்றுவது, புது வித எமோஜிகள், அனிமேட்டட் அவதார் வசதி என்று ஏகப்பட்ட அப்டேட் பயனர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், வீடியோ கால் மூலமாக ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதியும் தற்போது அனைத்து IOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

whatsapp,update,screen sharing ,வாட்ஸ்அப் ,அப்டேட்  ,Screen Sharing

அதாவது, கடந்த 1 மாதத்திற்கு முன்பு மெட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே ஸ்கிரீன் ஷேரிங் அப்டேட் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து பயனர்களும் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுயிருக்கிறது.

மேலும், அதாவது, ஸ்கிரீன் ஷேரிங் முறையில் கூடுதலாக Poll வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் வகுப்புகள், ஆபீஸ் மீட்டிங் என்று அனைத்திற்கும் இந்த ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். மேலும், அடுத்தடுத்து இந்த அம்சத்தினை மேலும் சிறப்பாக்கும் வகையிலான அப்டேட்டும் வர இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Tags :
|