Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் 2-வது கட்ட சோதனை நடைபெற்றது

சீனா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் 2-வது கட்ட சோதனை நடைபெற்றது

By: Karunakaran Wed, 22 July 2020 09:44:08 AM

சீனா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் 2-வது கட்ட சோதனை நடைபெற்றது

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் தோன்றியது. இந்த கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க இந்தியா, இங்கிலாந்து, ரஷியா, அமெரிக்கா, சீனா என பல நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் ஜைடஸ் கேடிலா நிறுவனதடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் நிலையை அடைந்துள்ளன.

china,corona vaccine,second phase test,corona virus ,சீனா, கொரோனா தடுப்பூசி, இரண்டாம் கட்ட சோதனை, கொரோனா வைரஸ்

தற்போது சீனாவிலும் ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 2-வது கட்ட சோதனை நடந்துள்ளது. சோதனை முடிவில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புச்சக்தியை தூண்டுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடப்பட்ட பின்னர், போட்டுக்கொண்ட நபர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனையின்போது, 253 பேருக்கு அதிகளவில் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. 129 பேருக்கு குறைந்த அளவு தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டது. 126 பேருக்கு மருந்து போலி தரப்பட்டது. மருந்து போலி பெற்றவர்களை விட தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல்சோர்வு, ஊசி போட்ட இடத்தில் வலி போன்றவை ஏற்பட்டது. பெரும்பாலான பாதகமான எதிர்வினைகள் லேசானவை அல்லது மிதமானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|