Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில், 25 ரயில்களை இயக்க திட்டமிடல்

இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில், 25 ரயில்களை இயக்க திட்டமிடல்

By: vaithegi Wed, 27 July 2022 7:14:52 PM

இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில், 25 ரயில்களை இயக்க திட்டமிடல்

சென்னை: சென்னையில் முதற்கட்டமாக மெட்ரோ ரயில் நடைமுறைக்கு வந்துள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில், 25 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் படி மாதவரம் – சோழிங்கநல்லுார், மாதவரம் – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பை — பாஸ் வரை, மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் டெல்லியில் ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. இத்திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த போது நாட்டின் பிற நகரங்களிலும், தானியங்கி மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

train,automatic ,ரயில்,தானியங்கி

அந்த வகையில் சென்னையில் இரண்டாவது திட்டத்தில், ஓட்டுனர் இல்லா 26 தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க தற்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒட்டுநர் இன்றி இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.946.92 கோடியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதை அடுத்து சென்னையில் மெட்ரோ ரயில் 4 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஆனால் இரண்டாவது திட்டத்தில் முதல் கட்டமாக மூன்று பெட்டிகளுடனும் பயணிகளின் வருகையை பொறுத்து 6 பெட்டிகளுடனும் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரயில் நிலையங்கள் 6 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் சேவை உலக தரத்திற்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|