Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவசேனாவினர் எந்தவொரு நெருக்கடிக்கும் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள் - உத்தவ் தாக்கரே

சிவசேனாவினர் எந்தவொரு நெருக்கடிக்கும் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள் - உத்தவ் தாக்கரே

By: Karunakaran Sat, 20 June 2020 10:04:58 AM

சிவசேனாவினர் எந்தவொரு நெருக்கடிக்கும் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள் - உத்தவ் தாக்கரே

சிவசேனாவின் 54-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஆன்லைன் மூலம் உரையாற்றினார். அப்போது உரையாற்றிய அவர், சிவசேனா அநீதியை எதிர்த்து போராடுவதற்காக பிறந்தது என்றும், தந்தை பால்தாக்கரேயின் மரபுகளை முன்னோக்கி எடுத்து செல்கிறது என்றும் கூறினார்.

தான் முதல்-மந்திரி ஆன பிறகு கட்சி தொண்டர்கள் உடனான தொடர்பு குறைவாகவே இருந்தாலும், ஒருபோதும் கட்சி தொண்டர்களிடம் இருந்து தன்னை பிரித்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். மேலும் அவர், சிவசேனாவினர் எந்தவொரு நெருக்கடிக்கும் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்காக உழைக்கிறார்கள் என்று கூறினார்.

uthav thackeray,shiv sena,maharastra cm,party volunteers ,உத்தவ் தாக்கரே,சிவசேனா,மராட்டிய முதல்வர்,கட்சி தொண்டர்கள்

புயல் வந்தாலும், சூறாவளி வந்தாலும், வேறு எந்த பிரச்சினைகள் வந்தாலும் உங்களை போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை நான் எதற்கும் அஞ்ச மாட்டேன் எனவும், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து விவாதிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியுடனான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறேன் எனவும் கூறினார்.

மேலும் அவர், மராட்டியம் நெருக்கடி நேரத்தில் இமயமலையுடன் இருக்கும். மாநிலத்தில் ஆரம்பத்தில் 2 ஆக இருந்த கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை தற்போது 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோயை எதிர்த்து போராடும் டாக்டர்களுக்கு தேவையான முககவசம், பி.பி.இ. கருவிகள் மற்றும் கையுறைகள் என அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Tags :