Advertisement

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 39 சதவீதம் அதிகமாக பதிவு

By: Monisha Fri, 10 July 2020 5:31:39 PM

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 39 சதவீதம் அதிகமாக பதிவு

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் இன்று கூறியுள்ளதாவது:-

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள், வட தமிழகம் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

southwest monsoon,weather,heavy rain,cloudy,chennai ,தென்மேற்கு பருவமழை,வானிலை,கனமழை,மேகமூட்டம்,சென்னை

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை இயல்பை விட 39 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேலும், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|