Advertisement

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவலின் வேகம் உயர்வு

By: vaithegi Sat, 17 Sept 2022 11:52:41 AM

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவலின் வேகம் உயர்வு

இந்தியா: கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஓரளவுக்கு குறைந்தது. இதனால் மக்களும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள்.

ஆனால் கடந்த சில நாட்களாகவே இந்தியா உள்பட ஒரு சில உலக நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கூட சென்னையில் இந்த தொற்று பரவலின் வேகம் அதிகரிப்பதால் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.65 கோடியை தாண்டியுள்ளது.

corona,world ,கொரோனா ,உலகம்

எனவே இதன் மூலம் தற்போது வரை உலக அளவில் இந்நோய் தாக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,65,18,663 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 59,58,21,197 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை மட்டும் உலகம் முழுவதும் 65,28,751 பேர் பலியாகியுள்ளனர். நோய் பாதிப்பு சற்று உயருவதால் மக்கள் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Tags :
|