Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாலம் அமைக்கும் பணிக்கு இடையூறாக தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டது

பாலம் அமைக்கும் பணிக்கு இடையூறாக தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டது

By: Nagaraj Fri, 03 Feb 2023 10:23:49 AM

பாலம் அமைக்கும் பணிக்கு இடையூறாக தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டது

நாகர்கோவில்: குளத்துவிளையில் சிறுபாலம் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு மோட்டார் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி நடந்தது.

நாகர்கோவில் – மணக்குடி சாலையில் ரூ.75 லட்சத்தில் 4 சிறுபாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு சாலை மற்றும் பாலப்பணிகள் நடந்து வருகிறது. வெள்ளடிச்சிவிளை அருகே மணக்குடி சாலையில் மழைக்காலத்தில் குளத்துவிளை பகுதியில் தண்ணீர் சீராக செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது.

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெள்ளடிச்சிவிளை அருகே சிறுபாலம், குளத்துவிளையில் 3 சிறுபாலங்கள் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது.

இதற்கான பணிகள் சில நாட்களுக்கு முன் துவங்கியது. குளத்துவிளையில் சிறுபாலம் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு மோட்டார் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி நடந்தது.

nagercoil,setting task,small bridges, ,அமைக்கும் பணி, சிறு பாலங்கள், நாகர்கோவில்

இதை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முத்துராமன் பார்வையிட்டு கூறியதாவது: இந்த பாலங்கள் தண்ணீர் தேங்காத வகையில் கட்டப்படுகிறது. பாலம் கட்டும் பணி காரணமாக சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அனைத்து சிறுபாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். கூறினார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் கேட்டபோது, மணக்குடி சாலையில் 4 மதகுகள் (சிறிய பாலங்கள்) பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். இதுதவிர அஞ்சுகிராமத்தில் பேவர் பிளாக்ஸ் போடும் பணி ரூ.7.20 லட்சத்தில் நடந்து வருகிறது.

கணபதிபுரம் முருங்கவிளை சாலை ரூ.50 லட்சத்திலும், குலசேகரம் திருவரம்பு சாலை ரூ.3 கோடியே 15 லட்சத்து 58 ஆயிரத்திலும். அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுபோன்ற பல பணிகள் நடந்து வருகின்றன என்றார்

Tags :