Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநிலங்களவை கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு

மாநிலங்களவை கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு

By: Karunakaran Wed, 23 Sept 2020 3:58:22 PM

மாநிலங்களவை கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவுக்கு மத்தியிலும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக, இந்த கூட்டத்தொடர் இரு அவைகளாக பிரித்து நடத்தப்படுகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த மாநிலங்களவை கூட்டத்தொடர், தற்போது கொரோனா காரணமாக முன் கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை என பல கட்டுப்பாடுகளிடனே அனைவரும் அவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அமைச்சர்கள், எம்.பி.க்கள் மத்தியில் கொரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநிலங்களவை கூட்டத்தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 நாட்களுடன் முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது.

state assembly,monsoon session,parliment,end ,மாநில சட்டசபை, பருவமழை அமர்வு, பாராளுமன்றம், முடிவு

மாநிலங்களவையை காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். மாநிலங்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி, அவைக்கு வந்திருந்தார். கடைசி நாளான இன்று எதிர்க்கட்சிகள் அவையில் இல்லை.

இதனால் எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நிலையில், தொழிலாளர் தொடர்பான 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என எதிர்க்கட்சிகள் சார்பில் அவைத்தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட 3 தொழிலாளர் மசோதாக்களும் இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது

Tags :