Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் மருத்துவமனைகளின் 80 சதவீத படுக்கைகள் மாநில அரசு கட்டுப்பாட்டில் வந்தது

தனியார் மருத்துவமனைகளின் 80 சதவீத படுக்கைகள் மாநில அரசு கட்டுப்பாட்டில் வந்தது

By: Nagaraj Fri, 22 May 2020 8:54:22 PM

தனியார் மருத்துவமனைகளின் 80 சதவீத படுக்கைகள் மாநில அரசு கட்டுப்பாட்டில் வந்தது

தனியார் மருத்துவமனைகளின் 80 சதவீத படுக்கைகளை மகாராஷ்டிரா அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாநில அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

தொடர்ந்த தனியார் மருத்துவமனைகளின் 80 சதவீத படுக்கைகள் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அதன்படி அரசு கட்டுப்பாட்டில் உள்ள 80 சதவீத படுக்கைகளுக்கு மாநில அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

private hospital,80 per cent bed,bills,government,fix ,தனியார் மருத்துவமனை, 80 சதவீத படுக்கை, கட்டணம், அரசு, நிர்ணயம்

வார்டுகளில் உள்ள படுக்கைகள், தனிமைப் படுக்கைக்கு ஒரு நாளைக்கு ரூ 4000, வென்டிலேட்டர் இல்லாத ஐ.சி.யு., படுக்கைக்கு ஒரு நாளைக்கு ரூ 7,500, வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யு., படுக்கைக்கு ஒரு நாளைக்கு ரூ 9,000 என கட்டணம் மாநில அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 20 சதவீத படுக்கைகளுக்கு தனியார் மருத்துவமனை நிர்ணயித்துள்ள கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.

Tags :
|