Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் நலனை கருத்தில் கொண்ட மாநில அரசு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

மக்கள் நலனை கருத்தில் கொண்ட மாநில அரசு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

By: vaithegi Wed, 27 July 2022 3:35:25 PM

மக்கள் நலனை கருத்தில் கொண்ட மாநில அரசு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

சென்னை: சிறப்பு ரயில்கள் என்றாலே ஒவ்வொரு பண்டிகையின் போதும் இயக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த பொதுவான ஒன்று. ஆனால் கொரோனா வைரஸ் தாக்களுக்கு பிறகு கடந்த சில மாதங்களாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து சிறப்பு ரயில்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வந்த வண்ணமாக உள்ளது.

அந்த வகையில் தற்போது ஆந்திர மாநில அரசும் கூட்ட நெரிசலை கருத்தில் வைத்து விசாகப்பட்டினம் – பெங்களூரு சிறப்பு ரயிலை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதாவது, விசாகப்பட்டினத்தில் இருந்து, தமிழகம் வழியாக கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூருக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.

special train,state govt ,சிறப்பு ரயில்,மாநில அரசு

இச்சிறப்பு கட்டண ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆகஸ்டு மாதம் 7, 14, 21, 28 மற்றும் செப்டம்பர் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மாலை 3:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.00 மணிக்கு பெங்களூர் சென்றடையும். மேலும், பெங்களூரில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் 8, 15, 22, 29 மற்றும் செப்டம்பர் மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில், மாலை 3:50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.

மேலும் இந்த சிறப்பு கட்டண ரயில்கள் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags :