Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசாவில் வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களையும் மூட மாநில அரசு உத்தரவு

ஒடிசாவில் வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களையும் மூட மாநில அரசு உத்தரவு

By: Karunakaran Sat, 07 Nov 2020 08:33:34 AM

ஒடிசாவில் வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களையும் மூட மாநில அரசு உத்தரவு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின், ஆன்லைன் வழி கல்விக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, மாநிலங்களின் விருப்பத்தின்பேரில் பள்ளிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இருப்பினும், சில மாநிலங்களில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே எண்ணற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்புகள் தென்பட்டு உள்ளன. இதனால் அந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்புகளின் 2-வது அலை ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளி கூடங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

state government,schools,odisha,corona 2nd wave ,மாநில அரசு, பள்ளிகள், ஒடிசா, கொரோனா 2 வது அலை

அதன்படி, வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை மூடுவது என அரசு முடிவு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால், தேர்வுகள் நடத்துவதற்கும் (பாடத்தேர்வு, போட்டித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு), மற்றும் பிற நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வி தொடர அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், கல்வி அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்துள்ள சுகாதார செயல்பாட்டு வழிமுறைகளின்படி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அல்லது அது தொடர்புடைய பணிகளுக்காக செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|