Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் - முதல்வர் எடியூரப்பா

சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் - முதல்வர் எடியூரப்பா

By: Monisha Sat, 23 May 2020 11:30:08 AM

சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் - முதல்வர் எடியூரப்பா

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல ஆபத்தான பயணங்களை மேற்கொண்டனர். இதனால் பல்வேறு இன்னல்கள் மற்றும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்க மத்தியரசிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்று மத்திய அரசு கடந்த வாரங்களில் சிறப்பு ரெயில் சேவையை துவங்கியது. தற்போது சிறப்பு ரெயில் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருப்பதால் அவர்களை அனுப்புவது பெரும் சவாலாக உள்ளது. மேலும், அவர்களின் பயண கட்டணத்தில் மத்திய அரசு 85 சதவீதத்தை ஏற்றுக்கொள்கிறது.

special train,chief minister yeddyurappa,migrant workers,karnataka,dk sivakumar ,சிறப்பு ரெயில்,முதல்வர் எடியூரப்பா,புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்,கர்நாடகா,டி.கே.சிவக்குமார்

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடகத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வந்துள்ளவர்கள் சிரமிக் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவை மாநில அரசே ஏற்கும்“ என்றார்.

முதல்-மந்திரி எடியூரப்பாவின் இந்த முடிவை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வரவேற்றுள்ளார். காங்கிரஸ் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக முதல்-மந்திரிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags :