Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க அசாம் மாநிலம் முடிவு

வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க அசாம் மாநிலம் முடிவு

By: Nagaraj Sun, 02 Aug 2020 1:32:58 PM

வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க அசாம் மாநிலம் முடிவு

அசாமில் பள்ளி, கல்லூரிகளை வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளதாக மாநில கல்வித்துறை அமைச்சர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்திலும் கொரானா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இங்கும் மத்திய அரசு அறிவித்துள்ளபடி வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

september,corona,school,college,opening ,செப்டம்பர், கொரோனா, பள்ளி, கல்லூரி, திறப்பு

இந்நிலையில் அம்மாநில கல்வி அமைச்சர் பிஸ்வாஸ் கூறியதாவது: அசாமில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தால் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னதாக வரும் 23ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படும். இதில் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|