Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் மாநிலத் தலைவர் நேற்று காலமானார்

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் மாநிலத் தலைவர் நேற்று காலமானார்

By: Monisha Thu, 11 June 2020 10:12:05 AM

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் மாநிலத் தலைவர் நேற்று காலமானார்

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (ஐஎன்டியுசி) மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.காளன் சென்னை அம்பத்தூரில் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 82.

16 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஎன்டியுசி மாநிலத் தலைவராக இருந்த அவர், 1991 முதல் 1996 வரை வில்லிவாக்கம் எம்எல்ஏவாக இருந்தார். நாட்டின் அனைத்து துறை முகங்களிலும் உள்ள ஐஎன்டியுசி சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தார்.

state president,indian national trade union congress,passed away,g kalan ,ஐஎன்டியுசி,மாநிலத் தலைவர்,காலமானார்,ஜி.காளன்

ஜி.காளன், உடல் நலக் குறைவு மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக நேற்று காலமானார். ஜி.காளனின் உடல் இன்று (ஜூன் 11) மாலை அம்பத்தூரில் தகனம் செய்யப்படுகிறது.

ஜி.காளனின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags :