Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது; வானிலை ஆய்வு மையம் தகவல்

புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது; வானிலை ஆய்வு மையம் தகவல்

By: Nagaraj Sun, 31 May 2020 4:47:16 PM

புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது; வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 2ம் தேதி வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக் கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது நாளை மறுநாள் (ஜூன் 2ம் தேதி) புயலாக வலுவடையக் கூடும்.


arabian sea,storm,southwest,monsoon,weather ,அரபிக்கடல், புயல், தென்மேற்கு, பருவ மழை, வானிலை

இதனால் ஜூன் 5ம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இந்த வருடம் ஜூன் 5ம் தேதி தான் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், நாளையே துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரபிக்கடலில் உருவாகும் இந்த புயலால் நேரடியாக இந்தியாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்ற போதிலும், பருவமழையை தாமதப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

Tags :
|