Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்கட்சிகள் அமைக்கும் வியூகம்... கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாதாம்

எதிர்கட்சிகள் அமைக்கும் வியூகம்... கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாதாம்

By: Nagaraj Sun, 19 Mar 2023 5:49:15 PM

எதிர்கட்சிகள் அமைக்கும் வியூகம்... கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாதாம்

மேற்கு வங்கம்: பாஜகவை வீழ்த்த அமைக்கப்படும் கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாஜகவை தோற்கடிக்க பல மாநில தலைவர்கள் கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், இந்த கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாது என்று கூறப்படுகிறது. 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

congress,team,yadav,akhilesh yadav,alliance,bjp,congress,team,yadav, ,அகிலேஷ் யாதவ், கூட்டணி, பாஜக

செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் பேசுகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ஆகியோர் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜகவை தோற்கடிப்பதில் காங்கிரஸ் கட்சியை விட பிராந்திய கட்சிகள் கடுமையாக போராடி வருவதாகவும், அந்த கட்சிகளின் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்றார். அவரது பேச்சில் இருந்து பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாது என்று கூறப்படுகிறது.

Tags :
|
|
|
|
|