Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போராட்டம் தீவிரப்படுத்தப்படும்; சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் எச்சரிக்கை

போராட்டம் தீவிரப்படுத்தப்படும்; சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் எச்சரிக்கை

By: Nagaraj Tue, 03 Jan 2023 5:12:00 PM

போராட்டம் தீவிரப்படுத்தப்படும்; சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் எச்சரிக்கை

சென்னை: தமிழக அரசு ஓய்வூதியத்தை அதிகப்படுத்தி, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க செயலாளர் மாயமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் `சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும்.

state executives,agitation,election period,notifications,implementation ,மாநில நிர்வாகிகள், போராட்டம், தேர்தல் காலம், அறிவிப்புகள், அமல்

குறைந்தபட்ச பென்ஷன் 7850 ரூபாய் அமல்படுத்த வேண்டும், மருத்துவப் படி 300 வழங்க வேண்டும், ஈமக்கிரியை செலவு நிதி 25,000 வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே EPF, GPF, lump sum வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.


மேலும், “தேர்தல்கால அறிவிப்புகளை அமல்படுத்த தயங்காமல் அமல் படுத்துங்கள், சமூக நலத்துறை அமைச்சர், முதலமைச்சர் எங்கள் சங்க மாநில நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். எங்கள் போராட்டம் தீவிரமாகும்” என்று முழக்கங்கள் எழுப்பினர்.

Tags :