Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2-18 வயதினருக்கு கோவேக்ஸின் பாதுகாப்பானது என ஆய்வில் நிரூபணம்

2-18 வயதினருக்கு கோவேக்ஸின் பாதுகாப்பானது என ஆய்வில் நிரூபணம்

By: Nagaraj Sat, 18 June 2022 10:52:05 AM

2-18 வயதினருக்கு கோவேக்ஸின் பாதுகாப்பானது என ஆய்வில் நிரூபணம்

புதுடில்லி: பாதுகாப்பானது என்று அறிவிப்பு... கோவேக்ஸின் தடுப்பூசி 2-18 வயதினருக்கு பாதுகாப்பானது; அந்த வயதுக்கு உள்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட மற்றும் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து 2-18 வயதினரிடம் இரு கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பா் வரை நடத்தப்பட்ட பரிசோதனையில், அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது; நோயெதிா்ப்பு சக்தியை அளிக்கக் கூடியது; பக்க விளைவு குறைவானது என்பது தெரியவந்துள்ளது.

covaxin,vaccine,mild exposure,study,safe ,கோவேக்சின், தடுப்பூசி, லேசான பாதிப்பு, ஆய்வு, பாதுகாப்பானது

இந்த பரிசோதனை விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் சமா்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 6-18 வயதினருக்கு அந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அந்த அமைப்பு ஒப்புதல் அளித்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநா் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ‘இந்தியாவில் 5 கோடி டோஸ்கள் கோவேக்ஸின் தடுப்பூசி, சிறாா்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவேக்ஸின் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்பது நிரூபணமாகியுள்ளது.


கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதில் தீவிரமான பக்க விளைவு ஏதும் வரவில்லை. 374 பேருக்கு லேசான பாதிப்பு இருந்தது. அதுவும் ஓரிரு நாளில் சரியாகிவிட்டது என்றாா் அவா்.

Tags :
|