Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் சராசரியாக 4 பேரில் ஒருவருக்கு கொரோனா பரவி இருப்பதாக ஆய்வில் தகவல்

டெல்லியில் சராசரியாக 4 பேரில் ஒருவருக்கு கொரோனா பரவி இருப்பதாக ஆய்வில் தகவல்

By: Karunakaran Thu, 23 July 2020 10:38:34 AM

டெல்லியில் சராசரியாக 4 பேரில் ஒருவருக்கு கொரோனா பரவி இருப்பதாக ஆய்வில் தகவல்

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அசுரவேகத்தில் பரவி வருகிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் கொண்ட தலைநகர் டெல்லியில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. டெல்லியில் நாள்தோறும் வைரஸ் உறுதி செய்யப்படுவர்களி எண்ணிக்கை சராசரியாக 1,000 என்ற அளவிலேயே உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று 1,227 புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்க 1 லட்சத்து 26 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 650 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா காரணமாக இதுவரை 3 ஆயிரத்து 719 பேர் உயிரிழந்துள்ளனர்.

delhi,corona virus,corona prevalence,corona death ,டெல்லி, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

தற்போது டெல்லியில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் உண்மையான எண்ணிக்கை கால் சதவிகிதம் இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது சராசரியாக 4 பேரில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. டெல்லியில் தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் 21 ஆயிரத்து 387 பேரிடம் நடத்திய ஆய்வில், 23.48 சதவிதம் பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் ஒப்பிடும் பட்சத்தில் 46 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. டெல்லியில் உள்ள மக்களில் 77 சதவிகிதம் பேருக்கு உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதால் கொரோனா சுலபமாக பரவிவிடலாம் எனவும் தெரியவந்துள்ளது.

Tags :
|