Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிக்கும் என ஆய்வில் தகவல்

கொரோனா அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிக்கும் என ஆய்வில் தகவல்

By: Karunakaran Mon, 07 Sept 2020 4:10:24 PM

கொரோனா அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிக்கும் என ஆய்வில் தகவல்

பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இ கிளினிக்கல் மெடிசன் இதழில் வெளியான செய்தியில், குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona symptoms,childrens,heart,corona virus ,கொரோனா அறிகுறிகள், குழந்தைகள், இதயம், கொரோனா வைரஸ்

சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உள்ளது. 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் தான் ஆன்டினோவில் உள்ள சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வரு, மோரேரா கூறுகையில், தற்போது ஒரு புதிய குழந்தைப்பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. இது பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது. இதயம் மற்றும் நுரையீரல், இறைப்பை குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அரிகுறிகள் பலவிதமான பரிமாற்றங்களை கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
|