Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயோடின் கரைசல் கொரோனா வைரஸை முழுமையாக செயலிழக்கச் செய்யும் என ஆய்வில் தகவல்

அயோடின் கரைசல் கொரோனா வைரஸை முழுமையாக செயலிழக்கச் செய்யும் என ஆய்வில் தகவல்

By: Karunakaran Tue, 22 Sept 2020 6:05:54 PM

அயோடின் கரைசல் கொரோனா வைரஸை முழுமையாக செயலிழக்கச் செய்யும் என ஆய்வில் தகவல்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனைகள் கட்டத்திலே இருப்பதால், தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.12 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.28 கோடியாக உள்ளது.

அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 54,87,580 ஆக உயர்ந்து உள்ளது. இந்நிலையில் நாம் பல முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு முறைகளைப் புரிந்துகொண்டு மதிப்பாய்வு செய்வது மிகவும் முக்கியமாகிறது. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் வைரஸ் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

iodine solution,inactivates,corona virus,corona impact ,அயோடின் கரைசல், செயலிழக்கச் செய்கிறது, கொரோனா வைரஸ், கொரோனா தாக்கம்

இந்நிலையில் கொரோனா நோயை ஏற்படுத்தும் சார்ஸ், கோவ் 2 என்ற வைரஸ் பரவுவதைத் தடுக்க அயோடின் கரைசலைப் பயன்படுத்துவது உதவும் என்று ஒரு புதிய ஆய்வு இப்போது பரிந்துரைத்துள்ளது. போவிடோன்- - 0.5%, 1.25% மற்றும் 2.5% என்ற அயோடினின் மூன்று வெவ்வேறு செறிவுகளுக்கு எதிராக வைரஸின் மாதிரிகளை அவர்கள் பரிசோதித்தபோது, 15 விநாடிகளுக்குள் வைரஸை முழுமையாக இவை செயலிழக்கச் செய்தது கண்டறியப்பட்டது. அதே சோதனை எத்தனால் ஆல்கஹால் மூலமும் நடத்தப்பட்டது. ஆனால் இது போன்ற நேர்மறையான முடிவை அது காட்டவில்லை.

0.5 அயோடின் செறிவு கூட சார்ஸ், கோவ்-2 வைரஸை முற்றிலுமாக செயலிழக்கச் செய்யலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற பிற தொற்றுநோய்களில் வைரஸ்களை செயலிழக்க அயோடின் கரைசல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆய்வு முன்பு கண்டறிந்தது. தற்போது அயோடின் கரைசலைப் பயன்படுத்தி வைரஸை செயலிழக்க 15 வினாடிகள் போதுமானதாக இருக்கும் என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :