Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக தடுப்பூசி இருக்கும் என ஆய்வில் தகவல்

அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக தடுப்பூசி இருக்கும் என ஆய்வில் தகவல்

By: Karunakaran Wed, 05 Aug 2020 11:01:42 AM

அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக தடுப்பூசி இருக்கும் என ஆய்வில் தகவல்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 8 மாதங்கள் ஆகியும் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் தொற்று நேற்று மாலை, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளி விவரப்படி, உலகமெங்கும் 1.85 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க உலகமெங்கும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இதுவரை எந்தவொரு தொற்று நோய்க்கும் இத்தனை தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டதே இல்லை. தற்போது, தடுப்பூசி முயற்சியில் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ‘பிரண்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜி’ பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

vaccine,corona virus,virus strains,corona prevalence ,தடுப்பூசி, கொரோனா வைரஸ், வைரஸ் விகாரங்கள், கொரோனா பாதிப்பு

உலகமெங்கும் இருந்து பல்வேறு பரிசோதனைக்கூடங்களில் பிரித்தெடுக்கப்பட்ட 48 ஆயிரத்து 635 கொரோனா வைரஸ் மரபணு வரிசைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்குகிற தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அனைத்தும் கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக பயன் உள்ளதாக இருந்ததாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் குறைந்த பரிணாம மாற்றத்தை கொண்டிருப்பதால், அது கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கி வரும் தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் அனைத்து வைரஸ்களுக்கு எதிராகவும் பலன் அளிக்கும். இதனால் கொரோனா வைரசை கூடிய விரைவில் விரட்டியடிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Tags :