Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கு பாட வாரியான பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியாகி இருக்கிறது

மாணவர்களுக்கு பாட வாரியான பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியாகி இருக்கிறது

By: vaithegi Mon, 06 Feb 2023 5:54:33 PM

மாணவர்களுக்கு பாட வாரியான பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியாகி இருக்கிறது

சென்னை: பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு .... தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் 10, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டார். எனவே அதன் படி 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற இருப்பதாகவும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ம் முதல் மே 5 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும், 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும், 10-ம் வகுப்புத் தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும் வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 10, 11 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியான தேர்வு தேதி அட்டவணை இதோ

public examination,students ,பொதுத்தேர்வு ,மாணவர்கள்

இதையடுத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

ஏப்ரல் 6 -வியாழன் – தமிழ்
ஏப்ரல் 10 -திங்கள்- ஆங்கிலம்
ஏப்ரல் 13- வியாழன்- கணிதம்
ஏப்ரல் 17- திங்கள் -அறிவியல்
ஏப்ரல் 20- வியாழன்- சமூக அறிவியல்

அதைத்தொடர்ந்து 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

ஏப்ரல் 14 – செவ்வாய்- தமிழ்
ஏப்ரல் 16 – வியாழன் – ஆங்கிலம்
ஏப்ரல் 20- திங்கள் – இயற்பியல், பொருளாதாரம்
ஏப்ரல் 24 – வெள்ளி – உயிரியல், வரலாறு, தாவரவியல்
ஏப்ரல் 28- செவ்வாய்- வேதியியல், கணக்கு பதிவியல்
ஏப்ரல் 30-வியாழன்- கணினி அறிவியல்
மே 5- புதன்- கணிதவியல், விலங்கியல், வணிகவியல்

மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

மார்ச் 13 – திங்கள் – தமிழ்
மார்ச் 15- புதன் – ஆங்கிலம்
மார்ச் 17- வெள்ளி -கணினி அறிவியல்
மார்ச் 21 – செவ்வாய்- இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 27 – திங்கள் – கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
மார்ச் 31- வெள்ளி – உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்
ஏப்ரல் 3- திங்கள் – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

Tags :