இசைக்கருவிகளை தீயிட்டு எரித்த தாலிபான்கள்
By: Nagaraj Tue, 01 Aug 2023 7:22:16 PM
ஆப்கானிஸ்தான்: இசைக்கருவிகளுக்கு தீ... ஆப்கானிஸ்தானில் கைப்பற்றப்பட்ட ஏராளமான இசைக்கருவிகளை தாலிபான்கள் தீயிட்டு எரித்தனர்.
2021ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பொது இடங்களில் இசையை இசைப்பது உட்பட பல கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த இசைப்பள்ளிகளையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்கு ஹெராத் மாகாணத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இசைக்கருவிகளை கைப்பற்றிய தாலிபான்கள் அவற்றை தெருவில் போட்டு தீ வைத்து எரித்தனர்.
இசையால் இளைஞர்கள் வழிதவறிச் சென்று விடுவதாக தாலிபான் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
Tags :
music |
youth |
arson |