Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளுடன் இன்று மத்திய வேளாண் மந்திரி நடத்தவிருந்த பேச்சுவார்த்தை ரத்து

விவசாயிகளுடன் இன்று மத்திய வேளாண் மந்திரி நடத்தவிருந்த பேச்சுவார்த்தை ரத்து

By: Karunakaran Wed, 09 Dec 2020 4:12:19 PM

விவசாயிகளுடன் இன்று மத்திய வேளாண் மந்திரி நடத்தவிருந்த பேச்சுவார்த்தை ரத்து

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 14-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மத்திய அரசு இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்தநிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளை நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் அமித்ஷாவுடன் மத்திய மந்திரிகள் நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றபோது விவசாயிகளிடம் அமித்ஷா சில வி‌ஷயங்களை கண்டிப்புடன் தெரிவித்தார். 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ஒரு போதும் திரும்ப பெறவே பெறாது என்று உறுதிபட கூறினார். அதைக்கேட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், அப்படியானால் எங்களது முற்றுகை போராட்டமும் முடிவுக்கு வராது. எவ்வளவு நாளானாலும் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

union agriculture minister,farmers,amith shah,delhi ,மத்திய வேளாண் அமைச்சர், விவசாயிகள், அமித் ஷா, டெல்ஹி

இந்நிலையில் விவசாயிகளை சமரசம் செய்யும் வகையில் 3 வேளாண் சட்டங்களிலும் 3 முக்கிய திருத்தங்களை செய்ய தயாராக இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார். இதைக்கேட்டதும் விவசாய சங்க பிரதிநிதிகளில் பாதி பேர் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் பஞ்சாப் விவசாய சங்க பிரதிநிதிகள் அமித்ஷா தெரிவித்த கருத்தை உடனடியாக ஏற்கவில்லை. அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக விவசாயிகள் இன்று பல்வேறு சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க இருப்பதால் இன்று பிற்பகலில் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

வேளாண் சட்டங்களில் அரசு மேற்கொள்ள இருக்கும் திருத்தங்கள் என்னென்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்ல விவசாய பிரதிநிதிகள் ஆலோசித்து வருகிறார்கள். எனவே விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இன்று முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக இன்று மத்திய மந்திரி சபை கூட்டமும் நடைபெற உள்ளது. அதில் விவசாயிகளுக்கு சாதகமாக வேளாண் சட்டங்களில் முக்கிய திருத்தங்களை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

Tags :