Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது

By: vaithegi Tue, 02 May 2023 11:22:43 AM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது

சென்னை: கடந்த 2021 மே 7-ம் தேதி தமிழக முதல்வராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் கடந்தாண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அதேபோன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கருக்கு போக்குவரத்து துறை வழங்கப்பட்டது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் இந்த முறை சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

cabinet meeting,m.k.stalin ,அமைச்சரவை கூட்டம்,மு.க.ஸ்டாலின்

இதையடுத்து சரியாக செயல்படாத அமைச்சர்களை மாற்றி விட்டு புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா அல்லது மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ஆகியோர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதேபோன்று பால் கொள்முதல், பால் விநியோகம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், அத்துறை அமைச்சராக இயங்கி வரும் பால்வளத்துறை அமைச்சர் நாசரும் துறை மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் அத்துடன் அமைச்சரவை கூட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :