Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவு

மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவு

By: vaithegi Wed, 29 June 2022 10:04:44 AM

மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட்வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்த நிலையில், அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி, மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்தி கொள்ளவும் வழிவகை செய்து இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu electricity board,uniform ,தமிழ்நாடு மின்வாரியம் ,சீருடை

அலுவலகத்துக்கு சாதாரண உடை அணிந்து வர கூடாது என்றும், பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்கள் வேட்டி, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடைகளை அணிந்து வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோர் மீது தக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது..


Tags :