Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது

தமிழக மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது

By: vaithegi Wed, 03 Aug 2022 11:06:20 AM

தமிழக மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது பல்வேறு புதிய திட்டங்களை மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதியாக மாதம்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். மேலும் வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6% அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள மின்சார கட்டணம் உயர்வு மேலும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tamil nadu electricity board,electricity charges ,தமிழக மின்சார வாரியம் ,மின்சார கட்டணம்

இதை அடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ள கட்டண உயர்வுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆண்டு தோறும் மின்கட்டண உயர்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த திட்டம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு (2026-2027) அனைத்து வகை நுகர்வோருக்கும் மின் கட்டணத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் நடப்பு ஆண்டிற்கான (2022-23) செப்டம்பர் 1 ஆம் தேதி கட்டண உயர்வுக்கான தேதியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மே மாத நுகர்வோர் விலை குறியீட்டை கொண்டு இந்த ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மின் நிறுவனங்கள் மற்றும் பல மாநிலங்களும் இது போன்ற கட்டண விதி முறையை பின்பற்றி வருகின்றன.

Tags :