ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது
By: vaithegi Tue, 31 Oct 2023 10:09:23 AM
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வழக்கு .... ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என புகார் கூறியுள்ளது.
மேலும் குறிப்பிட்ட காலம் வரம்புக்குள் மசோதாக்கள் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளது.
இதையடுத்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்ய முடிவு எடுத்து உள்ளது.
மசோதாக்கள் அரசு உத்தரவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் ஒரு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்து உள்ளது.