Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடக்கம்

கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடக்கம்

By: vaithegi Thu, 10 Aug 2023 3:25:15 PM

கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடக்கம்

சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் , பணிகள் தொடக்கம்..சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், வெளியூர் பயணிகளின் வசதிக்காகவும் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ. 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள இந்த பேருந்து நிலையம், விரைவில் திறக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக அதன் அருகிலேயே புதிதாக புறநகர் ரயில் நிலையம் அமைக்க ரயில்வே துறையுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

preliminary works,government of tamil nadu,suburban railway station ,முதற்கட்ட பணிகள், தமிழக அரசு, புறநகர் ரயில் நிலையம்

புறநகர் ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயும் ஒப்புதல் வழங்கி உள்ளது. ரயில் நிலையம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் பணிகளுக்காக அரசு சார்பில் ரூ. 40 லட்சம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தெற்கு ரயில்வேயிடம் மேலும் 20 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக ரூ. 4 கோடியை வழங்க சிஎம்டிஏ முடிவு செய்து உள்ளது.

வண்டலூர், ஊரப்பாக்கம் பெருநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக கிளம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்கான ஆய்வு பணிகளை ரயில்வே வாரியம் இறங்கியுள்ளது.அதையடுத்து இடம் இறுதி செய்யப்பட்டதும் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags :