Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்ட 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்த வாலிபருக்கு மரண தண்டனை

டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்ட 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்த வாலிபருக்கு மரண தண்டனை

By: Karunakaran Wed, 16 Dec 2020 12:02:23 PM

டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்ட 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்த வாலிபருக்கு மரண தண்டனை

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தகாஹிரா சிராய்ஷி என்ற வாலிபர், 2017-ம் ஆண்டு டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். அதில் தனது பெயரை சிராய்ஷி என்று குறிப்பிட்டு இருந்தார். அதில், உண்மையில் வேதனையில் இருப்பவர்களுக்கு நான் உதவி செய்ய விரும்புகிறேன். தேவைப்படுகிறவர்கள் தயவுசெய்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு தகவல் அனுப்புங்கள் என்று கூறி இருந்தார்.

இதை உண்மை என்று நம்பி அவருடன் தொடர்பு கொண்ட பெண்கள் மாயமானார்கள். இதில் ஒரு பெண்ணை போலீசார் தேடும் போது, டுவிட்டர் மூலம் வாலிபர் சிராய்ஷியுடன் தொடர்பு கொண்ட 8 பெண்களை வரவழைத்து கொலை செய்தது தெரிய வந்தது. விசாரணையின்போது டோக்கியோ அருகில் உள்ள ஜுமோ நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது, அங்கு துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.

teenager,9 kill,twitter,japan ,டீனேஜர், 9 கொலை, ட்விட்டர், ஜப்பான்

8 பெண்களை தவிர ஒரு ஆணையும் கொலை செய்துள்ளார். தனது காதலியை தேடி வந்த அவர், அது தொடர்பாக சிராய்ஷியிடம் விசாரித்தபோது ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்துள்ளார். 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்த இந்த ‘டுவிட்டர்’ வாலிபரின் கொலை சம்பவங்கள் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிராய்ஷி கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான கொலை வழக்கு டோக்கியோ கோர்ட்டில் நடந்தது. அப்போது குற்றச்சாட்டுகளை வாலிபர் சிராய்ஷி ஒப்புக்கொண்டார். அதன்பின், அவருக்கு நேற்று நீதிபதி மரண தண்டனை வழங்கினார். அந்த கோர்ட்டில் 16 இருக்கைகள் மட்டுமே இருந்தன. ஆனால், ‘டுவிட்டர்’ கொலையாளியின் தண்டனை விவரங்களை அறிய ஏராளமானோர் அங்கு கூடி இருந்தனர்.

Tags :
|