Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ள மீட்பு பணியை தீவிரப்படுத்த ராணுவ உதவியை நாடிய தெலுங்கானா அரசு

வெள்ள மீட்பு பணியை தீவிரப்படுத்த ராணுவ உதவியை நாடிய தெலுங்கானா அரசு

By: Nagaraj Wed, 21 Oct 2020 10:20:38 AM

வெள்ள மீட்பு பணியை தீவிரப்படுத்த ராணுவ உதவியை நாடிய தெலுங்கானா அரசு

ராணுவத்தின் உதவியை நாடிய அரசு... தெலுங்கானா வெள்ள மீட்பு பணியை மேலும் தீவிரபடுத்துவதற்கு ராணுவத்தின் உதவியை தெலுங்கானா மாநில அரசு நாடியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது.

அம்மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

rescue mission,army,assistance,telangana,state government ,மீட்பு பணி, ராணுவம், உதவி, தெலுங்கானா, மாநில அரசு

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும்பாலானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அதிலும் சிலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ள மீட்பு பணிகளை மேலும் தீவிர படுத்துவதற்கு ராணுவ குழுவினருக்கு தெலுங்கானா மாநில அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.

அந்த அழைப்பை ஏற்று ராணுவம் வெள்ள மீட்பு பணியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வெள்ள மீட்பு பணிகளுக்காக சிறப்பு 9 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர மீட்பு பணி நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 427 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டிருக்கின்றன.

Tags :
|