Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்

தமிழகத்தில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்

By: vaithegi Thu, 20 Apr 2023 3:33:06 PM

தமிழகத்தில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்

சென்னை: மக்களை மிரள வைக்கும் வெப்ப நிலை .. தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், சேலம், வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வெப்பநிலை தற்போது 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரூர் மாவட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- இன்று , வருகிற 21 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தகவல் தெரிவித்துள்ளது.

celsius,temperature,meteorological center ,செல்சியஸ் ,வெப்பநிலை ,வானிலை ஆய்வு மையம்

அதிலும் குறிப்பாக சென்னையில் அதிக வெப்பநிலை 37 – 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க கூடும். மேலும் தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுகுகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது.

எனவே இதன் காரணமாக ஏப். 22, 23, 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :