Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும்,நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை உயர வாய்ப்பு

இன்றும்,நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை உயர வாய்ப்பு

By: vaithegi Fri, 19 May 2023 2:32:17 PM

இன்றும்,நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை உயர வாய்ப்பு

சென்னை: இன்றும் ,நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது

வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

temperature,tamil nadu,puducherry,karaikal ,வெப்பநிலை , தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

இதனை அடுத்து 20.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.21.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் வருகிற 22.05.2023 மற்றும் 23.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

Tags :